close
Choose your channels

கபாலி' நடிகரின் புதுப்பட பூஜை

Saturday, May 28, 2016 • தமிழ் Comments
#
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள 'மெட்ராஸ்' கலையரசன் நாயகனாக நடித்த 'டார்லிங் 2' சமீபத்தில் வெளிவந்தது. மேலும் அவர் 'ராஜா மந்திரி', 'சீனா', 'பட்டினப்பாக்கம்', 'எய்தவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை தற்போது சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பாலாவின் 'அவன் இவன்' உள்பட பல படங்களில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கவுள்ளார். இருவரும் முதன்முறையாக இந்த படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment