கபாலி' நடிகரின் புதுப்பட பூஜை

  • IndiaGlitz, [Saturday,May 28 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள 'மெட்ராஸ்' கலையரசன் நாயகனாக நடித்த 'டார்லிங் 2' சமீபத்தில் வெளிவந்தது. மேலும் அவர் 'ராஜா மந்திரி', 'சீனா', 'பட்டினப்பாக்கம்', 'எய்தவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பூஜை தற்போது சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்கின்றார்.
இந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக பாலாவின் 'அவன் இவன்' உள்பட பல படங்களில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கவுள்ளார். இருவரும் முதன்முறையாக இந்த படத்தில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஏப்ரலில் 'தெறி', மே-வில் 'கபாலி'. கலக்கும் பிரபல இசை நிறுவனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தின் டீசர் பல உலக சாதனைகளை செய்துள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

'விஜய் 60' படம் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

'விஜய் 60'-அழகிய தமிழ்மகன். ஒரு அபூர்வ ஒற்றுமை

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்...

'தல 57' குறித்த அறிவிப்பு

தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்களை இன்று மாலை 05.07 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான...

பாலாவின் அடுத்த படத்தின் திட்டம் இதுதான்

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கனவுப்படமான 'குற்றப்பரம்பரை' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்தினார்.