கபாலி டீசர் தேதியை அறிவித்தார் தாணு

  • IndiaGlitz, [Thursday,February 11 2016]

சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள 'தெறி' படத்தின் டீசர் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தயாரித்து வரும் மற்றொரு பெரிய படமான 'கபாலி' படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சற்று முன் அறித்துள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் நாள் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறியபோது, "கபாலி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 20 அல்லது 25ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படக்குழு சென்னை வந்ததும் மார்ச் மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமை ரூ.8.5 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும், தெறி படத்தின் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தாணு கூறியுள்ளார்.

More News

'தெறி'யின் 7 தத்ரூபமான சண்டைக்காட்சிகள். திலீப் சுப்பராயன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் ஒரு போலீஸ் படம் என்பதும் இந்த படத்தில் விஜய்குமார் ஐ.பி.எஸ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே...

'கொடி' படத்தில் இருந்து மடோனாவும் நீக்கமா?

தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலி திடீரென அந்த படத்தில் இருந்து....

'சிவாஜி' ரஜினி பாணியில் கார்த்தி

ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான திரைப்படமான 'சிவாஜி' படத்தின் கிளைமாக்ஸில் ரஜினிகாந்த் மொட்டை தோற்றத்தில் தோன்றி அனைவரையும் அசத்தியிருப்பார்...

ஜெயம் ரவியின் 'மிருதன்'. ஒரு முன்னோட்டம்

கடந்த 2015ஆம் ஆண்டு நான்கு ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி இவ்வருடம் கொடுக்கும் முதல் ஹிட் படம் என எதிர்பார்க்கப்படும் 'மிருதன்' நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது....

கோவிலுக்குள் ஆணுறை விளம்பரம். சன்னி லியோன் மீது போலீஸ் புகார்

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இருவேடங்களில் நடித்த மஸ்திஜாதே (Mastizaade) என்ற திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது...