'கபாலி'க்காக கோர்ட் படியேறிய கலைப்புலி எஸ்.தாணு

  • IndiaGlitz, [Thursday,July 14 2016]

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு மட்டுமின்றி படக்குழுவினர்களுக்கு டென்ஷன் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த படத்தை திருட்டு டிவிடி கும்பலில் இருந்து காப்பாற்றி படத்தை தியேட்டருக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதே தயாரிப்பாளரின் முக்கிய கவலையாக உள்ளது.
இந்நிலையில் ஒருசில இணையதளங்கள் 'கபாலி' படத்தை ரிலீஸ் தினத்தின் அன்றே தங்கள் இணையதளங்களில் பதிவு செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகைய முயற்சிகளை தடுக்கவும், அதேபோல் திருட்டு டிவிடி கும்பலிடம் இருந்து இந்த படத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் கலைப்புலி எஸ்.தாணு இன்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தாணு தனது மனுவில் 'கபாலி' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் பதிவு செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

More News

சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'கபாலி' பிரிமியர்?

புதிய படங்களின் பிரிமியர் காட்சிகள் இதுவரை வெளிநாட்டில் மட்டுமே நடந்து வருகிறது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் படம்...

முன்னாள் உலக அழகியுடன் இணைந்து நடிக்கும் நட்டி நட்ராஜ்

'சதுரங்கவேட்டை', 'கதம்கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் தற்போது 'போங்கு'...

விஜய்சேதுபதியுடன் இணைந்த 'இறைவி' நடிகை

'காக்கா முட்டை' என்ற உலகத்தரம் வாய்ந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கிய 'குற்றமே தண்டனை'...

'கொடி: தனுஷின் இரட்டை வேட ரகசியம்

தனுஷ் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள 'கொடி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன்...

ஜோதிகாவின் அடுத்த படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகை

பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா...