கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 05 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகிய கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த அடுத்த படமான 'துப்பாக்கி முனை' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதமே சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நான்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 'துப்பாக்கி முனை' திரைப்படம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்பிரபு, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். ராசாமதி ஒளிப்பதிவில், எல்.வி.முத்துகணேஷ் இசையில், புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களை புலமைப்பித்தன் எழுதியுள்ளார்.

More News

இரும்பு பெண்மணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: விஷால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு இதே டிசம்பர் 5ஆம் தேதிதான் காலமானார். அவருடைய இரண்டாவது நினைவு தினத்தை அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் இன்று அனுசரித்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ் சினிமாவின் பிரபல வசனகர்த்தாவும், பல நூல்கள் எழுதிய எழுத்தாளருமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சற்றுமுன் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மூட்டை தூக்கி கிடைத்த தொகையை கஜா பாதிப்பானவர்களுக்கு கொடுத்த விஷால்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலின் பாதிப்பு கணக்கிட முடியாத அளவில் இருந்தாலும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏராளமானோர் தாராளமாக நிதியளித்து வருகின்றனர்.

நாளை 'விஸ்வாசம்' டீசரா? பிரபல திரையரங்கு உரிமையாளர் டுவீட்டால் பரபரப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகளை தகர்த்தது

ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் நயன்தாரா!

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார்.