சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தளித்த கலைப்புலி எஸ்.தாணு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை இன்று அவருடைய ரசிகர்கள் மிகவும் முழுமையாக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இன்று காலை முதல் டுவிட்டர் உள்பட சமூக வலைதளங்களில் சூர்யாவின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவின் அடுத்த படமான ’வாடிவாசல்’ திரைப்படத்தை தயாரிக்க இருப்பதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ’வாடிவாசல்’ படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள கலைப்புலி எஸ் தாணு தனது வாழ்த்து கவிதை ஒன்றை சூர்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது

தம்பி...
இன்று உங்கள் பிறந்த நாள்
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நாளில்
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம்
பாத பலம்
ஆயுள் பலம் பெற்று
வாழிய பல்லாண்டு

என்று தெரிவித்துள்ளார்

வாடிவாசல் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு சூர்யாவின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு சரியான விருந்தை கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.