வறுமையில் வாடும் பிரபல நடிகரின் குடும்பத்திற்கு தாணு நிதியுதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர், 'அடைந்தால் மகாதேவி இல்லையே மரணதேவி' என்ற வசனத்தின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திட முடியாது. நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறி பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட பல படங்களை தயாரித்தவர். இருப்பினும் இறுதிக்காலங்களில் இவர் தயாரித்த ஒருசில படங்கள் தோல்வி அடைந்ததால் கடனில் தவித்தார்.
இவருடைய மகன் பி.எஸ்.வி.ஹரிஹரன் அவர்களும் ஒரு தயாரிப்பாளராக இருந்தவர் தான். இருப்பினும் தற்போது வறுமையில் வாடுவதோடு, குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளார்.
இந்நிலையில் இவரது நிலைமை குறித்து கேள்விப்பட்ட பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தாமாகவே முன் வந்து ரூ 1 லட்சத்துக்கான வரைவோலையை பிஎஸ்வி ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். இந்த உதவியை முதலில் சத்தமில்லாமல் செய்துவிட வேண்டும் என்றுதான் கலைப்புலி தாணு விரும்பினார். ஆனால், தான் உதவி செய்ததைப் பார்த்த பிறகு, பிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடித்த பிரபலங்கள் ஹரிஹரனுக்கு மேலும் பண உதவி செய்ய முன் வரக்கூடும் என்பதாலேயே இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார் கலைப்புலி தாணு.
கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் உதவி செய்தத்தை அடுத்து தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் பி.எஸ்.வி.ஹரிஹரனுக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com