'வாடிவாசல்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு..

  • IndiaGlitz, [Friday,March 31 2023]

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’விடுதலை’. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்திற்காக மாடுபிடி பயிற்சியில் சூர்யா அவ்வப்போது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:

தம்பி சூர்யாவும் இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் ’வாடிவாசல்’ படம் உலகத் தமிழர்களுக்கு ஒரு விடியல். இந்த வருடத்தில் ரசிகர்கள் எண்ணம் நிறைவேறும், உலகத் தமிழர்கள் அனைவரும் உச்சி முகரும் படைப்பாக ’வாடிவாசல்’ அமையும் என்று கூறியுள்ளார்.

சூர்யா தற்போது ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால் சூர்யா விரைவில் வெற்றி மாறனின் ’வாடிவாசல்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.