கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோவா? மாஸ் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கிச்சா சுதீப்பின் 46வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவை தாணு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.