உலக சாதனை படைக்க இருக்கும் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற கலைப்புலி எஸ்.தாணு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை பெற இருக்கும் திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸ் உரிமையை கலைப்புலி எஸ் தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது என்பதும் உலகிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் இதுதான் என்ற அங்கீகாரம் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது என்பது தமிழ் சினிமாவில் கிடைத்த பெருமை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’இரவின் நிழல்’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
ஓடி ஜெயிக்கும் முன்-நான்
புதிய பாதைக்காக ஓடும் போதே விசிலடித்து உற்சாகப்படுத்தியவர் தாணு அவர்கள்!அவர்கள் இன்றும் என் IN-க்கு உற்சவர் ஆவது… அவரது பாஷையில் “இந்த நாள் இனிய நாள்!!!
அட்சய திருதியையன்று - இன்று
தங்கம் வாங்குவது விருத்தி
விருத்திமிகு கலைப்புலி எஸ்.தாணு அவர்கள்
தங்கக்காசுகளை அள்ளி வழங்கிவிட்டு
அகிலமெங்கும் ‘இரவின் நிழல்’ மீது
வர்த்தக வெளிச்சம் பாய்ச்ச...
வி-கிரியேஷன்ஸூக்கு உரிமை பெற்றுள்ளது - பெருமை என தெரிவித்துள்ளார்.
ஓடி ஜெயிக்கும் முன்-நான்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 3, 2022
புதிய பாதைக்காக ஓடும் போதே விசிலடித்து உற்சாகப்படுத்தியவர் தாணு அவர்கள்!அவர்கள் இன்றும் என் IN-க்கு உற்சவர் ஆவது… அவரது பாஷையில் “இந்த நாள் இனிய நாள்!!!@theVcreations @arrahman @shreyagoshal @varusarath5 @GenauRanjith @RVijaimurugan @ArthurWisonA pic.twitter.com/u9aBVYT5DV
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments