ஒரு கோடி நன்கொடை மற்றும் வெற்றிமாறன் கைகாட்டும் நபருக்கு இயக்குனர் வாய்ப்பு: கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றிமாறனின் அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய கலைபுலி எஸ் தாணு, வெற்றிமாறனின் அறக்கட்டளையில் படிக்கும் மாணவ மாணவிகளில் யாரை வெற்றிமாறன் கை காட்டுகிறாரோ அவருக்கு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் " நாம் அறக்கட்டளையின் சார்பாக திரை - பண்பாடு ஆய்வகத்தை துவக்கியுள்ளார் .
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .
கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரிக்கும் திரைப்படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இளம் கலைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதும், அவரால் வாய்ப்பு பெற்றவர்கள் இன்று தமிழ் சினிமாவின் உயரத்தில் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. இளம் இயக்குனர்களின் படங்களை பிரமாண்டமான விளம்பரத்தால் வெற்றிப்படமாக்கும் தாணு அவர்கள், தற்போது வெற்றிமாறன் எடுத்துள்ள இந்த புதிய முயற்சியிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளதால் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் அதிகரிக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.
இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் .
" நாம் அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜா நாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments