ஒரு கோடி நன்கொடை மற்றும் வெற்றிமாறன் கைகாட்டும் நபருக்கு இயக்குனர் வாய்ப்பு: கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,April 16 2022]

வெற்றிமாறனின் அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு கோடி வழங்கிய கலைபுலி எஸ் தாணு, வெற்றிமாறனின் அறக்கட்டளையில் படிக்கும் மாணவ மாணவிகளில் யாரை வெற்றிமாறன் கை காட்டுகிறாரோ அவருக்கு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நாம் அறக்கட்டளையின் சார்பாக திரை - பண்பாடு ஆய்வகத்தை துவக்கியுள்ளார் .

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு நுழைவு தேர்வு வைத்து  அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று , உண்மையிலேயே சமூகத்தால்  புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில்  பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .

கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரிக்கும் திரைப்படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இளம் கலைஞர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதும், அவரால் வாய்ப்பு பெற்றவர்கள் இன்று தமிழ் சினிமாவின் உயரத்தில் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. இளம் இயக்குனர்களின் படங்களை பிரமாண்டமான விளம்பரத்தால் வெற்றிப்படமாக்கும் தாணு அவர்கள், தற்போது வெற்றிமாறன் எடுத்துள்ள இந்த புதிய முயற்சியிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளதால் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்கள் அதிகரிக்க இன்னும் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S  தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது  V Creations நிறுவனத்தில்   படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் .

நாம் அறக்கட்டளையை சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர்  ஃபாதர் ராஜா நாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .

More News

யுவன் போட்ட வீடியோ: விவாதத்தில் அனிருத் ரசிகர்கள்!

இசையமைப்பாளர் யுவன் பகிர்ந்த வீடியோவால் அனிருத் மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் விவாதம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கே.ஜி.எப் 2' ஒரு பேய்ப்படம்: சொன்னது யார் தெரியுமா?

யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது

சினேகாவை அலேக்காக தூக்கி கொஞ்சும் பிரசன்னா: க்யூட் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்!

நடிகை சினேகாவை அவரது கணவர் பிரசன்னா அலேக்காக தூக்கி கொஞ்சும் க்யூட் புகைப்படங்கள் சினேகாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

'அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?: 'தளபதி 66' படம் குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' மடத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்களை மீறி கோடிகளை குவிக்கும் 'பீஸ்ட்': 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கிவிட்டன. இருப்பினும் இந்த படத்தின் வசூல் மட்டும் குறையவில்லை