12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால். ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஞாயிறு அன்று அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் தனி அணியாக போட்டியிட்ட கலைப்புலி ஜி.சேகரன் அணி, போட்டியிலிருந்து விலகி ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இந்த அணியின் இணைப்பு விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, கலைப்புலி ஜி.சேகரன், ஜேஎஸ்கே, டி.சிவா, சுரேஷ் காமாட்சி, ஜேகே ரித்தீஷ், சிவசக்தி பாண்டியன், கே.ராஜன், அழகன் தமிழ்மணி, ஞானவேல், சௌந்தர் , இயக்குநர் திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது: நான் இன்று இங்கே தொழிலில் நிற்கக் காரணம் கலைப்புலி ஜி.சேகரன்தான். இங்கே அசகாய சக்தியாக அவர் வந்திருக்கிறார். அவர் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. அன்று 5, மீரான் சாஹிப் தெருவிலிருந்து தொடங்கிய எங்களின் நட்பு பழமையானது. ஆழமானது. அப்போதெல்லாம் அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் 'பொல்லாத ஊரு' என்றொரு கதை. இன்று எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடிக்கலாம் ஒரு வெற்றிப் படமாவது கிடைக்கும் .
விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடட்டார்கள். 12 படங்கள் தோல்வியடைந்துள்ளன. உதாரணத்துக்கு 'சமர்' படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள் (தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு ஊடகங்கள் முன் பேசவிட்டார். ரமேஷ் நாயுடு பேசும் போது- " நான் 'சமர்' படத்தின் தயாரிப்பளர் பேசுகிறேன். அன்று 'சமர்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச் சேரியில் படமாகிக் கொண்டிருந்தது . நூற்றுக் கணக்கான துணை நடிகர்கள் இருக்கிறார்கள் .கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர்.

கடைசி நாள். பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின் போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன். ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், இருக்கமாட்டேன் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறி விட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இத்தனைக்கும் அவருக்கு நான் சம்பளம் முழுதும் கொடுத்து விட்டேன். கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள்.
நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம். அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது.'' என்றார் குமுறலுடன்)
பிறகு தாணு தொடர்ந்து பேசும் போது, ''பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை? விஷால் இது என்ன கேலிக் கூத்து? அப்படி எதற்கு உனக்கு இந்த பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..? நீ ஒரு அழிவு சக்தி? தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார் சங்கப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்தவர். 1. 35 கோ டிரூபாய், அந்த டிரஸ்ட் பணத்தைத் தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும்.
விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம். இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால் ?
தயாரிப்பாளர்களை நாடக நடிகர்கள் என்று நினைத்தாயா? நாசர் நல்லவர். அவர் புனித ஸ்தலம் போன்றவர். குறை சொல்ல இடமில்லாதவர். உன்னுடன் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. போட்டோ ஆதாரத்துடன் 1 ஆம் தேதி வெளியிடுவேன். ராதாகிருஷ்ணன் தயாரிப்பாளர்களின் நலம் காப்பவர். சிறுபடத் தயாரிப்பாளர்ளுக்காகப் போராடுபவர். அவர் அணி வெற்றி பெறும். அதற்காக நாங்கள் துணை நிற்போம்' இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு பேசினார்.

More News

சிம்புவின் 'AAA' படத்தில் இணைந்த 4வது நாயகி

நடிகர் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்டைலிஷ் இளைஞர் ஆகிய வேடத்தில் நடித்து வருகிறார்

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கமல், ரஜினி கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கும் தயாரிப்பாளர்

தென்னிந்திய நடிகர்சங்கத்தின் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் முறைப்படி அடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது...

சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா'வில் இருந்து திடீரென விலகிய முக்கிய பிரமுகர்

பிரபல இயக்குனர் சுந்தர் சியின் கனவுப்படமும், பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் பிரமாண்டமான படமுமான 'சங்கமித்ரா' இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது...

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக '2.0' நாயகி பிரச்சாரம்? காரணம் தொப்பியா?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறந்து கொண்டு வரும் நிலையில் பிரபல நடிகையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் நாயகியுமான எமிஜாக்சன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது....

சென்னையில் ரஜினியை சந்திக்கின்றாரா மலேசிய பிரதமர்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது மலேசிய பிரதமர், மலாக்கா ஆளுனர் ஆகியோர் ரஜினியை வரவேற்று விருந்தளித்தனர் என்பது தெரிந்ததே...