கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 2 படங்களில் நடிக்கும் மாஸ் நடிகர்!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தாணு அவர்களின் தயாரிப்பில் வெளியான ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தை தாணு தயாரிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இரண்டு திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஒரு படத்தை பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சீனுராமசாமி இயக்கத்தில் ’தென்மேற்கு பருவக்காற்று’ ’தர்மதுரை’ ’இடம் பொருள் ஏவல்’ மற்றும் ’மாமனிதன்’ ஆகிய நான்கு படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. தாணு-விஜய் சேதுபதி இணையும் இரண்டு படங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்....! யார் இந்த பப்ஜி மதன்...?

மதன் குமார் மாணிக்கம் என்பது இவரோட முழுப்பெயராகும். சிவில் எஞ்சினியரிங் முடித்த இளைஞர், பணக்கராக வீட்டு பையன் என்றும் சொல்லலாம்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு! 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

வரும் 21 ஆம் தேதி முதல் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று அதிமுக

தேசிய விருது பெற்ற இளம் நடிகர் சாலை விபத்தில் மரணம்: நடிகை கஸ்தூரி இரங்கல்!.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் ஒருவர் சாலை விபத்தில் மரணம் அடைந்ததை அடுத்து நடிகை கஸ்தூரி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து உள்ளார்

தி ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் சர்ச்சையை சம்பாதித்த இரட்டையர்கள்!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “தி ஃபேமிலி மேன் 2” வெப் தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

சென்னை- ஸ்பெஷல் ட்ரெயினிங் என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பயிற்சியாளர்!

சென்னையில் ஜிம் ஒன்றிற்கு சென்ற இளம் பெண்ணிடம் அதன் பயிற்சியாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.