படம் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் விடாமல் எழுந்த கைதட்டல்கள்.. கலைப்புலி எஸ். தாணு வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்து ரோட்டர்டம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் படம் முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து ஐந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக கைதட்டி படக்குழுவினர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூகவலை களத்தில் பதிவு செய்து படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா தற்போது உலக அரங்கை நோக்கி சென்று கொண்டிருப்பது என்பது இந்த கைத்தட்டல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறிய அவர் இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட்குமார் ஆகியோர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களின் கைதட்டல் அடங்கிய வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் இணைத்து ஒரே பாகமாக ரோட்டர்டம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது என்பதும் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Viduthalai Part 1 & 2 The film receives a thunderous standing ovation at @IFFR! Powerful 5-minute applause resonates with the impactful storytelling and stellar performances at #RotterdamFilmFestival
— Red Giant Movies (@RedGiantMovies_) February 1, 2024
An @ilaiyaraaja Musical#VetriMaaran @VijaySethuOffl @sooriofficial… pic.twitter.com/ov1w4TmtQd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com