தனுஷின் 'கர்ணன்' பட சூப்பர் அப்டேட்டை தந்த கலைப்பு தாணு!

தனுஷ் நடிப்பில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீசை நோக்கி படக்குழுவினர் பணியை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ‘கர்ணன்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றைத் தந்துள்ளார். ‘கர்ணன்’ படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தனுஷ் சிறப்பான முறையில் தன்னுடைய பகுதியின் டப்பிங் பணியை முடித்து உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து கிட்டத்தட்ட ரிலீசுக்கு ‘கர்ணன்’ திரைப்படம் தயாராகி விட்டதாகவே கருதப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.