கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த வெளியீட்டில் கவுதம் மேனன்: ஃபர்ஸ்ட்லுக்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வழங்கும் ஜீவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஒன்றை கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வெளியிட உள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை 11:24 மணிக்கு வெற்றிமாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுகிறார்கள் என கலைபுலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கூறியிருப்பதாவது:
வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குநர் வெற்றிமாறன், தனது பாசறையில் பயின்ற மதிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நாளை காலை 11.24 மணிக்கு தனது FB பக்கத்தில் வெளியிடுகிறார் என தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக கலைபுலி எஸ் தாணு, ஜீவி பிரகாஷ், கௌதம் மேனன் ஆகியோர் இணையும் இந்த திரைப்படம் அறிவிப்பின் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றியை தனது உழைப்பால் வென்றெடுக்கும் அகிலம் போற்றும் இயக்குநர் @VetriMaaran, தனது பாசறையில் பயின்ற @mathimaaran இயக்கத்தில்,@gvprakash, @menongautham இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் First Look Poster-ஐ,நாளை காலை 11.24 மணிக்கு தனது FB பக்கத்தில் வெளியிடுகிறார் @DGfilmCompany pic.twitter.com/r5dsyYAM2W
— Kalaippuli S Thanu (@theVcreations) September 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com