'டார்லிங் II' ஆக மாறிய 'ஜின்'

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்த 'ஜின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. காளி வெங்கட், அர்ஜூனன், ராம்தாஸ் மற்றும் புதுமுகம் ரமேஷ் உள்பட பலர் நடித்து வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்த படத்தை சமீபத்தில் பார்த்தபோது, அவர் ரிலீஸ் செய்த 'டார்லிங்' படத்திற்கும் இந்த படத்திற்கு ஒருசில ஒற்றுமை இருந்ததால், இந்த படத்திற்கு 'டார்லிங் II' என்று மாற்றியதாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தை போலவே இந்த படத்திலும் ஐந்து நண்பர்கள் ஒரு பேய்பங்களாவிற்குள் செல்கின்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களே படத்தின் கதை. 'டார்லிங்' படத்தை போல கதை ஆரம்பித்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது. நட்பு, ரொமான்ஸ், த்ரில் ஆகியவை கலந்து ஆடியன்ஸ் திருப்தியடையும்படி இந்த படம் இருக்கும் என தான் நம்புவதாக சதீஷ் கூறினார்.

'டார்லிங் II' படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று இணையத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதில் ஸ்ருதிஹாசனுக்கு சிக்கலா?

நேற்று முன் தினம் மதுரை விமான நிலையத்தில் ஒருசில மர்ம நபர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்...

'தல 56' திரைப்படத்தில் அஜீத்துக்கு 3 கெட்டப்?

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது...

விஜய்யின் மின்னல்வேக வாள்சண்டை. அதிசயிக்கும் புலி படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பும் அதிகரித்து கொண்டே போகிறது...

'வெற்றிவேல்' சசிகுமாருக்கு இரண்டு ஹீரோயின்கள்?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், சசிகுமார்...

ஒரே நேரத்தில் ரஜினி-கமல் படங்களில் நடிக்கும் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' திரைப்படம் கடந்த 17ஆம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டு தற்போது ஈசிஆர் சாலையில் ...