'டார்லிங் II' ஆக மாறிய 'ஜின்'
Send us your feedback to audioarticles@vaarta.com
மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்த 'ஜின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. காளி வெங்கட், அர்ஜூனன், ராம்தாஸ் மற்றும் புதுமுகம் ரமேஷ் உள்பட பலர் நடித்து வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இந்த படத்தை சமீபத்தில் பார்த்தபோது, அவர் ரிலீஸ் செய்த 'டார்லிங்' படத்திற்கும் இந்த படத்திற்கு ஒருசில ஒற்றுமை இருந்ததால், இந்த படத்திற்கு 'டார்லிங் II' என்று மாற்றியதாக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' படத்தை போலவே இந்த படத்திலும் ஐந்து நண்பர்கள் ஒரு பேய்பங்களாவிற்குள் செல்கின்றனர். அவர்களுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களே படத்தின் கதை. 'டார்லிங்' படத்தை போல கதை ஆரம்பித்தாலும் இந்த படம் முற்றிலும் வித்தியாசமானது. நட்பு, ரொமான்ஸ், த்ரில் ஆகியவை கலந்து ஆடியன்ஸ் திருப்தியடையும்படி இந்த படம் இருக்கும் என தான் நம்புவதாக சதீஷ் கூறினார்.
'டார்லிங் II' படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று இணையத்தில் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments