ஜெமினிகணேசன் - சுருளிராஜன் பெயரில் டி.சிவா தயாரிக்கும் படம்

  • IndiaGlitz, [Thursday,June 23 2016]

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் அம்மன் கிரியேஷன்ஸ் டி.சிவா தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்குறான் குமாரு" என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் டி.சிவா 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மெட்ராஸ் கலையரசன் மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். காதலுக்கு பெயர் போன ஜெமினிகணேசனும், காமெடிக்கு பெயர் போன சுருளிராஜனும் செய்யும் நகைச்சுவை அட்டகாசங்கள் நிறைந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசு என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

More News

ரசிகர்களுக்கு சந்தானம் தரும் இரட்டை விருந்து

கோலிவுட் திரையுலகின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்றுள்ள சந்தானம்...

சரத்குமார் உடல்நிலைக்கு என்ன ஆச்சு? ராதிகா விளக்கம்

பிரபல நடிகரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்...

தனுஷின் 'வடசென்னை'யில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள 'வடசென்னை' படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

விஷ்ணு-சுசீந்திரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

வெண்ணிலா கபடிக்குழு', அழகர்சாமியின் குதிரை', ஜீவா உள்பட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன், உதயநிதி நடிக்கும் படம் ஒன்றை இயக்குவதாக இருந்தது.

இளையதளபதியின் அன்புக்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையா?

இளையதளபதி விஜய் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.