கலாபவன் மணி எப்படி இறந்தார்..? அறிக்கை வெளியிட்ட சிபிஐ.
Send us your feedback to audioarticles@vaarta.com
`கலாபவன் மணி கொல்லப்படவில்லை, கல்லீரல் கெட்டுப் போன நிலையிலும் தொடர்ந்து மது அருந்தியதே அவரின் மரணத்துக்குக் காரணம்' என்று சி.பி.ஐ அறிக்கை அளித்துள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்த கலாபவன் மணி 2016-ம் ஆண்டு மார்ச் 3- ந் தேதி திடீரென்று மரணமடைந்தார். சாலக்குடி அருகே தன் பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 45. கலாபவன் மணி இறப்பில், சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். உடற்கூறாய்வில், அவரின் உடலிலிருந்து காய்கறிப் பயிர்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான Chlorpyrifos இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சி.பி.ஐ அளித்துள்ள அறிக்கையில் கலாபவன் மணி கொல்லப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.35 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில், ``கலாபவன் மணிக்குக் காய்கறிகளைப் பச்சையாக உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. அதன் வழியாக அவரின் உடலில் Chlorpyrifos பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளது. அதோடு, இறக்கும் போது அவரின் உடலில் 4 மில்லிகிராம் எத்தனாலும் இருந்துள்ளது. மதுவுடன் எத்தனாலையும் கலந்து குடிக்கும் பழக்கம் கலாபவன் மணிக்கு இருந்துள்ளது. ஏற்கெனவே, அவருக்குக் கல்லீரல் கெட்டுப் போயிருந்ததால் எத்தனாலைக் கழிவுகளாக வெளியேற்ற முடியாமல் போயுள்ளது. இறக்கும் போது சிறிதளவு கஞ்சா அவரின் உடலில் இருந்துள்ளது. கல்லீரல் பிரச்னைக்கு அவர் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துச் சாப்பிட்டு வந்துள்ளார். அதில், கஞ்சா சிறிதளவு சேர்க்கப்பட்டிருக்கலாம். அப்படி, அவரின் உடலில் கஞ்சா கலந்திருக்கலாம்'' என்று சொல்லப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout