கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கலாபவன் மணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று உறுதி செய்யப்பட்டிருப்பனும் அவர் மரணத்திற்கு காரணம் யார்? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை தெரியாமல் இருந்தது
இந்நிலையில் கலாபவன் மணியின் சிறுநீர் மற்ற ரத்த மாதிரிகளில் செய்த ஆய்வில் அவருடைய உடலில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கலாபவன் மணியின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் அவருடைய மாமனார் பூச்சிமருந்து வாங்கியது தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை பூச்சிமருந்து கடைக்காரரும் உறுதி செய்துள்ளார்.
கலாபவன் மணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்த நிலையில் அவருடைய மாமனார் பூச்சிமருந்து வாங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனார் சுதாகரனிடம் தற்போது போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் யார்? என்பது குறித்து தெரியவரும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com