நியூயார்க் கொலம்பியா பல்கலையில் காட்சிப்படுத்தப்படும் ரஞ்சித்தின் 2 படங்கள்
- IndiaGlitz, [Tuesday,January 29 2019]
உலகின் முதல் தலித் திரைப்படவிழா அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து பல திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ள நிலையில் ரஞ்சித் இயக்கிய 'காலா' மற்றும் ரஞ்சித் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும், திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' என்ற ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
மேலும் பிப்ரவரி 23 மற்றும் 24ம் தேதிகளில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவில் இயக்குனர்கள் பா.ரஞ்சித், நாக்ராஜ் மன்ஜுலே மற்றும் நடிகை நிஹாரிகா சிங் ஆகியோர் கெளரவிக்கப்படுகின்றனர்.
காலா, பரியேறும் பெருமாள் படங்களை அடுத்து 'பபிலியோ புத்தா' என்ற மலையாள படமும் 'மாசான்', 'பேண்ட்ரி', 'போலே இந்தியா ஜெய் பீம்' ஆகிய இந்தி திரைப்படங்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.