'கக்கூஸ்' ஆவணப்பட பெண் இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

  • IndiaGlitz, [Tuesday,July 25 2017]

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக போராடிய மாணவி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் சற்றுமுன் பிரபல சமூகப் போராளியும், 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வளர்மதியாவது தற்போது நடந்து வரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் திவ்யபாரதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2009ஆம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோது ஈடுபட்ட போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தன்னை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக திவ்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருது பெற்ற திவ்யபாரதி இயக்கிய 'கக்கூஸ்' ஆவணப்படம்
துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளை பதிவு செய்திருந்தது. இந்த படத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில் தற்போது பழைய வழக்கு ஒன்றுக்காக கைது செய்யப்படுவது பழிவாங்கும் நடவடிக்கையே என்று சமூகவலைத்தளத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது திவ்ய பாரதிக்கு மதுரை நீதிமன்றம் ஒரு வார நிபந்தனை ஜாமீன் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

உதிராத புகழ் கொண்ட 'உதிரிப்பூக்கள்' மகேந்திரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் எத்தனையோ இயக்குனர் தோன்றியிருந்தாலும் ஒருசிலர் மட்டுமே புதுமையை புகுத்தும் தைரியம் கொண்டவர்களாக இருந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தை கலக்கிய ஓவியாவின் ஆர்மி

பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன், சென்ற பின் என்று ஓவியாவை ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும்....

கல்லுக்கு கூட சாரி சொல்லும் குழந்தை மனசு ஓவியா! நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

பொதுவாக நாம் நடந்து போகும்போது கல் இடித்துவிட்டால் நாம் தான் கல்லை இடித்தோம் என்பதை மறந்து கல்லை திட்டுவோம்...

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்.

ராமராஜன் நடித்த 'என்னப் பெத்த ராசா, என் ராஜாங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிராஜ் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65....

கன்பஃக்ஷன் அறையில் கண்ணீர் விட்ட ஓவியா

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒன்பது மட்டுமே இருந்தாலும் ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஓவியாவை தவிர அனைவரும் ஒரு குரூப்பாகவும், ஓவியா தனியாகவும் இருந்தாலும், ஓவியாவின் மனவலிமை அவரை அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வைத்து வருகிறது...