நான் ஏன் 'விஐபி 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கஜோல் கூறிய முக்கிய காரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த கஜோல்' 'விஐபி 2' படத்தில் நடிக்க நான் முதலில் தயங்கினேன். தமிழ் டயலாக் என்னால் பேச முடியாது என்று மறுத்தேன். ஆனால் தனுஷும் செளந்தர்யாவும் கூறிய ஒரே ஒரு காரணத்தால்தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது என்னவெனில் இந்த படத்தில் நான் பேசும் டயலாக்கும் 50% ஆங்கிலத்தில் இருந்தது என்பது தான். மீதியுள்ள தமிழ் வசனங்களை தனுஷின் உதவியால் ஆங்கிலத்தில் எழுதி வைத்து சமாளித்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.
மேலும் கஜோலின் கேரக்டர் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, 'இயக்குனர் செளந்தர்யா என்னுடைய கேரக்டர் குறித்து எதுவும் வெளியே சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனாலும் இதுவரை நான் நடித்திராத வித்தியாசமான கேரக்டர் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.
தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments