நடிகை கஜோலுக்கு என்ன ஆச்சு? திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கஜோல் கடினமான சோதனையில் இருப்பதாகக் கூறி அனைத்துச் சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆயிற்று என்று பதட்டத்தை வெளியிட்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்துவரும் நடிகை கஜோல் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்கிய ‘மின்சாரக்கனவு‘ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலில் செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதனால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 2017 இல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் வில்லியாக நடித்து மீண்டும் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நடிகை கஜோல் தற்போது ‘லவ் ஸ்டோரி 2‘ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென்சர்மா, ஆர் பால்கி மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நீனா குப்தா, விஜய் வர்மா, தமன்னா பாட்டியா, மிருணால் தாக்கூர் எனப் பலரும் நடித்துள்ளனர்.
இதைத்தவிர இயக்குநர் பி மல்ஹேபா இயக்கிய ‘தி குட் வைஃப்’ வெப் சிரிஸிலும் நடிகை கஜோல் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் நீக்கியுள்ளார். மேலும் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களில் இருந்து விலகுவதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதுகுறித்து முழுமையான காரணங்கள் எதுவும் கூறாத நிலையில் “என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன். சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்…” என்று அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ‘தி குட் வைஃப்’ வெப் சீரிஸிற்கு அவர் புரமோஷன் செய்கிறாரா? என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி இருந்தனர். ஆனால் சில ரசிகர்கள் நடிகை கஜோலுக்கு ஆறதல் கூறும் வகையில் “நீங்கள் வலிமையானவர் இதுபோன்ற தருணங்களில் இருந்து உறுதியாக மீண்டு வருவீர்கள்“ என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Taking a break from social media. pic.twitter.com/9utipkryy3
— Kajol (@itsKajolD) June 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments