ஹனிமூனில் இருந்து தப்பித்து வந்த நடிகையின் கணவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹனிமூன் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு பயணமாக இருக்கும். ஆனால் 'மின்சார கனவு' படத்தின் நாயகி கஜோலின் கணவரோ, ஹனிமூனின் பாதியில் இருந்தே தப்பித்து ஓடி வந்த கதை தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு நடிகை கஜோல், நடிகர் அஜய்தேவ்கான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே கஜோலின் விருப்பப்படி இரண்டு மாதங்கள் ஹனிமூன் செல்ல இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்த புதுமண ஜோடி அதன்பின் க்ரீஸ் நாட்டிற்கு சென்றனர். இடைவிடாத பயனத்தால் சோர்வடைந்த அஜய்தேவ்கான், போதும் தேனிலவு என்று கஜோலிடம் கூறி வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கஜோல் கூறினார்.
அளவுக்கு மிஞ்சினால் தேனிலவும் சலித்து போய்விடும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout