அழகுக்காக நடிகைகள் அறுவை சிகிச்சை செய்வது? ஓப்பனா பேசிய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதுபோன்ற தகவல்கள் அவ்வபோது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன. இந்நிலையில் நடிகைகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வது குறித்து பிரபல பாலிவுட் நடிகை கஜோல் மனம் திறந்துள்ளார். அவரது கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாலிவுட் சினிமாவில் கடந்த 1992 இல் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கஜோல். இதையடுத்து தனது வசீகரமான நடிப்பால் பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இவர் தமிழில் நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் நடிகர் அஜய்தேவ்கனை காதலித்து கடந்த 1999 இல் திருமணம் செய்துகொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவந்த நிலையில் ‘கபி குஷி கபி கம்’ இவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த வகையில் சினிமாவில் வாய்ப்பு பெற்று தொடர்ந்து நடித்து வந்த இவர் நீண்டநாட்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் மீண்டும் எண்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களை குஷி படுத்தியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரி2‘ திரைப்படத்தில் இவர் ‘தேவயானி சிங்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் தூள் கிளப்பி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து தற்போது சட்டம் தொடர்பான ‘தி ட்ரயல்’ எனும் வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். ஹாட் ஸ்டாரில் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நடிகை தனது புது வெப் சீரிஸ்க்கான நேர்காணல் ஒன்றில் பேசியபோது நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வது அவர்களது சொந்த விருப்பமாக இருக்க வேண்டும். 25 பேர் சொன்னார்கள் என்பதற்காக அதையெல்லாம் செய்யக்கூடாது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடவுள் உங்களை குறிப்பிட்ட வழியில் உருவாக்கியுள்ளார். நீங்கள் விரும்பியபடி கடவுள் உங்களை உருவாக்கவில்லை. நிறைய பேர் என்னிடம் அழகு பற்றி நிறைய விஷயங்களை சொன்னார்கள். அதையெல்லாம் மீறி நான் இன்னும் நன்றாகவே இருக்கிறேன். அந்த வகையில் நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்திருக்கிறேன். அவர்கள் என்னை ஏற்றுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நடிகைகள் அறுவை சிகிச்சை செய்து கொள்வது எல்லாம் அவர்களின் சொந்த விருப்பத்தின்பேரில் இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களின் வற்புறுத்தல்களினாலோ அல்லது மற்றர்வகளின் வழிகாட்டுதல்களினாலோ இருக்கக்கூடாது என்றும் நான் அதை செய்யவில்லை என்றும் நடிகை கஜோல் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.