திருமணத்திற்கு பின்னர் புது பிசினஸை தொடங்கிய காஜல் அகர்வால்!

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

தற்போது அவர் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ மற்றும் கமல்ஹாசன் ’இந்தியன் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கல்யாண் இயக்கும் ‘கோஸ்ட்டி’ என்ற படத்திலும் நடிக்க காஜல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் காஜல் தற்போது புது பிசினஸில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. வீட்டை அலங்கரித்து தருவது மற்றும் வீட்டுக்கு தேவையான கட்டில் மெத்தை தலையணை உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை விற்பனை செய்வது என்ற புதிய பிசினசை காஜல் ஆரம்பித்துள்ளதாகவும் ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த பிசினஸ் விளம்பரத்திற்கு கணவருடன் இணைந்து அவரே நடித்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்த விளம்பர புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு பிசினஸிலும் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.