காஜல் அகர்வாலின் காதல் முத்தம்: காட்டுத்தீ போல் வைரலாகும் லிப்லாக்!

  • IndiaGlitz, [Thursday,November 05 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் காஜல் அகர்வால் தனது கணவருடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் வட இந்தியாவில் கர்வா செளத் என்ற பூஜையை திருமணமான பெண்கள் நேற்று மேற்கொண்டனர். தங்களது கணவர் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் இந்த பூஜையை நேற்று காஜல் அகர்வாலும் தனது கணவருக்காக தனது வீட்டில் செய்தார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது காதல் கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றையும் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது