அப்பவே ஸ்டைலான போஸ்… நடிகை காஜல் அகர்வாலின் சிறுவயது புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவரின் துறுதுறு நடிப்பால் இன்றைக்கும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். கூடவே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை காஜல் தற்போது வெளியிட்டு உள்ள தனது சிறுவயது க்யூட் புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிவப்பு நிறத்தில் உடையணிந்து இருக்கும் அவர் தனது கையை கன்னத்தில் வைத்து செம க்யூட்டா போஸ் கொடுக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி இரைத்து வருகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “பழனி” எனும் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காஜல் தமிழில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி எனப் பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் “இந்தியன் 2“ திரைப்படத்திலும் இணைந்து இருக்கிறார்.

சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்ட இவருக்குத் தொடர்ந்து புது படங்களும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டில் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் “உமா“ எனும் படத்தில் நடிகை காஜல் இணைந்து இருக்கிறார். இதைத்தவிர “லைவ் டெலிகாஸ்ட்” “ஹேய் சினாமிகா“, “கோஸ்ட்டி“, “பாரீஸ் பாரிஸ்“ போன்ற படங்களிலும் தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் “ஆச்சார்யா” எனும் படத்திலும் இவர் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.