கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்: கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த காஜல் அகர்வால்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது உடல்வாகு குறித்து சில நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருவதை அடுத்து அவர் பதிலடி கொடுக்கும் வகையில் நீண்ட பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது வாழ்க்கை, எனது உடல், எனது வீடு மற்றும் மிக முக்கியமாக எனது பணியிடத்தில் மிகவும் அற்புதமான புதிய முன்னேற்றங்களை நான் பார்க்கின்றேன். மேலும் சில கருத்துகள், கேலி, கிண்டல்களைய்ம் பார்க்கின்றேன். அவர்களுக்காக சில விஷயங்கள்;
கர்ப்ப காலத்தில், நம் உடல் எடை அதிகரிப்பு உட்பட பல மாற்றங்களுக்கு உட்படுகிறது!! ஹார்மோன் மாற்றங்கள் குழந்தை வளரும்போது நம் வயிறு மற்றும் மார்பகங்கள் பெரிதாகி, நம் உடல் பாலூட்டுவதற்குத் தயாராகிறது. சிலருக்கு உடல் பெரிதாகும். நாம் வழக்கத்தை விட மிகவும் சோர்வாக இருக்கலாம் அல்லது அடிக்கடி மனநிலை மாறுபடலாம். எதிர்மறையான மனநிலையும் தோன்ற அதிக வாய்ப்புள்ளது.
மேலும், பிரசவத்திற்குப் பிறகு, நாம் முன்பு இருந்ததைத் திரும்பப் பெற சிறிது காலம் ஆகலாம் அல்லது கர்ப்பத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அதை முழுமையாக திரும்பப் பெற முடியாமலும் போகலாம். ஆனால் இந்த மாற்றங்கள் இயற்கையானவை.
நம் வாழ்வின் மிக அழகான, அதிசயமான மற்றும் விலைமதிப்பற்ற கர்ப்பகாலத்தில் நாம் இதுகுறித்து சங்கடமாகவோ அல்லது அழுத்தமாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை! குழந்தை பிறக்கும்போது இவை அனைத்தும் மறந்து நாம் அனுபவிக்க இருக்கும் கொண்டாட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையை பிரசவிக்க பெண்களின் உடல் ஆச்சரியமாக மாறுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில உடல் மாற்றங்கள் சங்கடமானவை, ஆனால் அவை அனைத்தும் உங்கள் வளரும் குழந்தைக்கு ஆதரவளிப்பவை.
நேர்மறையான வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தை வளர வளர உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் கணவர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை அடைத்து வைத்திருப்பது உங்களை மோசமாக உணர வைக்கும்.வழக்கமான உடல் செயல்பாடுகளை ஏற்று கொள்ளுங்கள். லேசான நீச்சல் அல்லது நடைப்பயிற்சி உங்கள் மனதைத் தெளிவுபடுத்தவும்
மகப்பேறுக்கு முன் யோகாவை மருத்துவரிடம் ஆலோசனை செய்து செய்யலாம். உங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதில் கவனம் செலுத்தவும். உங்கள் உடலுக்கும் மனதிற்கும் இடையே உள்ள இணைப்பில் அதிக கவனம் செலுத்த யோகா உதவுகிறது. அதேபோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று மசாஜ் செய்து மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கலாம்.
கர்ப்பத்தைப் பற்றி உங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள். உங்களைப் பயிற்றுவிப்பதன் மூலம், என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள், மேலும் நீங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை உணருவீர்கள். உங்களுக்குத் தேவைப்பட்டால் மனநல உதவியாளரையும் நாடலாம். இந்த உதவியை நாடுவதில் எந்த அவமானம் இல்லை. உங்களுக்காவும் உங்கள் குழந்தைக்காவும் இதனை செய்யுங்கள்.
இவ்வாறு காஜல் அகர்வால் தனது நீண்ட பதிவில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com