கறுப்பு காஸ்டியூமில் தாய்மையைக் கொண்டாடும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி சினிமாக்களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருந்துவந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவல் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் அவர் விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு கூடவே தனது தாய்மையைப் பற்றியும் சிலாகித்து பேசியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “ஹோ கயா நா“ எனும் இந்தி சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 2007 இல் “லட்சுமி கலியாணம்“ எனும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் தமிழில் இயக்குநர் பேரரசு இயக்கிய “பழனி“ எனும் திரைப்படத்தில் அறிமுகமான அவர் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துவிட்டார்.
இதையடுத்து கொரோனா காலத்தில் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திவந்த அவர் நடிகர் சிரஞ்சிவியுடன் இணைந்து நடித்த “ஆச்சார்யா“ திரைப்படத்திற்கு பிறகு கர்ப்பம் அடைந்ததால் தான் ஒப்புக்கொண்ட அனைத்துப் படங்களில் இருந்து விலகினார்.
தற்போது 7 மாதக் கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் தொடர்ந்து விதவிதமான போட்டோஷுட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். கூடவே தாய்மைக்கான தயாரிப்பு அழகாக இருக்கும். ஆனால் குழப்பமாக இருக்கும். ஒரு கணம் நீங்கள் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உணர்கிறீர்கள், அடுத்த கணம், நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள், உறங்கும் நேரத்தை எப்படி நிர்வகிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் ஆச்சர்யப்படுத்துகிறீர்கள்.
இந்த நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களில் நம் குழந்தைகள் மற்றும் கணவரை நேசிப்பதன் மூலம் இந்த உணர்ச்சிகளின் குவிப்பு (மகிழ்ச்சி, சோகம், பதட்டம், இதயத்துடிப்பு) நமது தனித்துவமான கதைகளை ஒன்றிணைத்து அவற்றை நம்முடையதாக ஆக்கிறது என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம். இதை எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார். நடிகை காஜல் தாய்மை குறித்து உணர்ச்சிப் பொங்க பதிவிட்டும் இந்தக் கருத்து தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments