கணவருடன் படப்பிடிப்புக்கு வந்த காஜல் அகர்வால்; மாலை மரியாதை செய்த படக்குழு!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றனர் என்பதும் தெரிந்ததே. மேலும் மாலத்தீவில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த போது காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தேனிலவை முடித்து விட்டு சமீபத்தில் மும்பை திரும்பிய காஜல் அகர்வால் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2 ’ மற்றும் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருந்ததால் விரைவில் இரண்டு படங்களின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு கணவருடன் காஜல் அகர்வால் வந்தபோது சிரஞ்சீவி உள்பட ’ஆச்சாரியா’ படக்குழுவினர் கெளதம்-காஜல் அகர்வால் தம்பதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

மேலும் படப்பிடிப்பு நடக்கும் முன்னர் கேக் வெட்டி தனது திருமணத்தை கொண்டாட்டமாக பட குழுவினருடன் சேர்ந்து காஜல் அகர்வால் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன