அஜித்துடன் முதல்முறையாக இணையும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,July 09 2016]


அஜித்தின் அடுத்த படமான 'தல 57' படத்தின் பூஜை எளிய முறையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படத்தின் நாயகியை உறுதி செய்யும் முடிவில் சிறுத்தை சிவா உள்ளார். 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் மீண்டும் இந்த படத்தில் அனுஷ்காவே நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஜய்யின் ராசியான நாயகியும், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜீவா உள்பட முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவருமான காஜல் அகர்வால், 'தல 57' படத்தின் நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் பெரும் பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தில் அஜித் FBI அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.