காஜல் அகர்வாலின் 'பாரீஸ் பாரீஸ்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய காஜல் அகர்வால் நடித்து வரும் 'பாரிஸ் பாரீஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே. இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'குவீன்' படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் பரமேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும் பரமேஸ்வரியின் பயணம் டிசம்பர் 21முதல் ஆரம்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய், அஜித், சூர்யா உள்பட முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்துள்ள காஜல் அகர்வால் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தின் நாயகியாகவும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.