close
Choose your channels

கணவரின் அணைப்பில் சிறைபட்ட நடிகை காஜல் அகர்வால்… வைரலான ரொமான்ஸ் புகைப்படங்கள்!

Monday, July 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ‘பழனி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். துருதுரு நடிப்பாலும் க்யூட்டாலும் அழகாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘மகதீரா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு முக்கிய நடிகையாக மாறினார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருந்தார்.

அதேபோல தெலுங்கிலும் பட ஹிட் படங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2020 இல் தனது பள்ளி தோழரும் தொழில் அதிபருமான கௌதம் கிட்சிலு என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கடந்த 2021 இல் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் தெரிவித்து இருந்தார். இதையடுத்து 2022 ஏப்ரல் மாதம் இந்த ஜோடிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சினிமாவை விட்டு சிறிது காலம் ஒய்வில் இருந்த அவர், பின்பு ஒருசில மாதங்களிலேயே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் அதேபோல தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘பகவந்த் கேசரி‘ திரைப்படத்திலும் இணைந்து நடித்துள்ளார். மேலும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள ‘சத்யபாமா’ திரைப்படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருக்கப் போகிறார் என்பதுபோன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி வந்தன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் நடிகை காஜல் தற்போது தனது கணவருடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த வகையில் துருக்கியிலுள்ள முக்கிய நீர்சந்திப்பு இடமான பாஸ்பரஸ் பகுதியில் அவர் படகு பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் கணவரது அரவணைப்பில் இவர் அமர்ந்துகொண்டு படகு பயணம் செய்யும் இவர் அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment