காஜல் அகர்வால் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானபோது அதில் காஜல் அகர்வாலின் மார்பகத்தை அவருடைய தோழியாக நடித்திருக்கும் ஒரு நடிகை பிடிப்பது போன்ற காட்சி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த நிலையில் 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படம் சென்சாருக்கு சென்றபோது இந்த சர்ச்சைக்குரிய காட்சி உள்பட மொத்தம் 25 காட்சிகளை நீக்குமாறு சென்சார் போர்டு வலியுறுத்தியதை அடுத்து படக்குழுவினர் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ரிவைசிங் கமிட்டியிலும் இந்த சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து வேறு வழியின்றி இந்த காட்சியை நீக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 'குயீன்' ஒரிஜினல் படத்திலும், இந்த படத்தின் கன்னட, தெலுங்கு, மலையாள ரீமேக்கிலும் இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் தமிழில் மட்டும் இந்த காட்சி நீக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments