விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண்வம்சி இயக்கி வரும் 'நக்ஷத்திரம்' என்ற படத்தில் சந்தீப் மற்றும் ரெஜினா நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் சுதீப்புக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக காஜல் அகர்வால் 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளதாகவும் கூறப்படுகிறது. காஜல் அகர்வால் மேலும் ஜீவாவுடன் 'கவலை வேண்டாம்', விக்ரமுடன் 'கருடா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.