காஜல் அகர்வால் திருமணத்தில் திடீர் மாற்றம்!
- IndiaGlitz, [Monday,October 12 2020]
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் என அதிகாரபூர்வமாக காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த திருமணம் மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற இருப்பதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே இத்திருமணத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மும்பையில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாகவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.