விஜய்-அஜித். யாருக்கு முதலிடம். காஜல் அகர்வாலின் புத்திசாலித்தனமான பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களான 'துப்பாக்கி' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்களின் நாயகியும், அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் நாயகியுமான காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்- அஜித் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள், குணாதிசியங்கள் குறித்து கூறியுள்ளார்.
திரையுலகை பொருத்தவரை விஜய், அஜித் இரண்டு பேருமே முதலிடத்தில் உள்ள பெரிய ஸ்டார்கள் என்றும், இருவருமே பழகுவதற்கு எளிமையானவர்கள் என்றும் நட்புக்கு மரியாதை கொடுக்க கூடியவர்கள் என்றும் காஜல் அகர்வால் கூறியுள்ளார். மேலும் தன்னை பொருத்தவரையில் இருவரும் ஒன்றுதான் என்றும் இருவரில் யாரும் பெரியவர் இல்லை என்று புத்திசாலித்தனமாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் பெரிய நடிகர்கள் கேட்டுக்கொண்டால் தமிழிலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட தயார் என்று காஜல் அகர்வால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments