திருமணமாகி 11 வருடங்கள்.. பிரபல நடிகரின் பதிவுக்கு காஜல் அகர்வால் வாழ்த்து!

  • IndiaGlitz, [Sunday,December 25 2022]

திருமணமாகி 11 ஆண்டுகள் ஆனது குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பிரபல நடிகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த பதிவுக்கு நடிகை காஜல் அகர்வால், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழில் ’வாயை மூடி பேசவும்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ மற்றும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக உள்ளார். இந்த நிலையில் நடிகர் துல்கர் சல்மான் கடந்த 2011ஆம் ஆண்டு அமல் சூபியா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி துல்கர் - அமல் தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில் 11 ஆவது திருமண நாளை சமீபத்தில் இந்த தம்பதிகள் கொண்டாடினர். இதுகுறித்து துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய போது ’சிறிது தாமதமாக பதிவு தான், ஆனால் உனக்கு தெரியும் இது ஒரு மகிழ்ச்சியான நாள் என்று. 11வது ஆண்டு திருமண நல்வாழ்த்துக்கள் அமல்.

எனக்கு தெரியவில்லை காலம் எங்கே சென்றது என்று. ஆனால் எனது தாடி எப்போது நிறம் மாறியதாகவும் தெரியவில்லை. நாம் எப்போதும் புதிய வீட்டினை வாங்கினோம் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்த சாதனையை எல்லாம் திரும்பி பார்க்கும்போது இருந்து வேறொரு வாழ்க்கை மாதிரி எனக்கு தெரிகிறது. ஆனால் நாம் இப்போது நம்முடைய சொந்த கதையை எழுதிக் கொண்டே இருக்கிறோம் என்று நினைக்கின்றேன். பெற்றோர்களாக இருப்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் இந்த பதிவு தாமதமானது’ என்று எழுதியுள்ளார்.

இந்த பதிவுக்கு காஜல் அகர்வால், கல்யாணி பிரியதர்ஷன், துல்கர் சல்மானுடன் ’சீதாராமம்’ என்ற படத்தில் இணைந்து நடித்த மிருணாள் தாக்கூர் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.