ஒரே காஸ்டியூமில் காஜல் அகர்வால் ஒட்டு மொத்த குடும்பம்.. 13 பேர் கொண்ட செம்ம புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,April 25 2023]

காஜல் அகர்வால் ஒட்டுமொத்த குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒரே காஸ்டியூமில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பதும் இந்த குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய காஜல் அகர்வால் இது குறித்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது தனது ஒட்டுமொத்த குடும்பத்தினர் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதில் காஜல் அகர்வால் அவரது கணவர் கெளதம் மற்றும் குழந்தை நீல் ஆகியோருடன் காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் மற்றும் அவரது கணவர், குழந்தை, காஜல் அகர்வாலின் தாய், தந்தை, மாமனார், மாமியார் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்கள் ஒரே புகைப்படத்தில் ஒரே காஸ்டியூமில் உள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தில் உள்ள ஒவ்வொருவரும் தாங்கள் காஜல் அகர்வால் குழந்தைக்கு என்ன உறவு என்பது குறித்த டீசர்ட் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது ’இந்தியன் 2’ உள்பட நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.