தண்ணீருக்கடியில் தேனிலவு கொண்டாடும் காஜல் அகர்வால்: வைரலாகும் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Thursday,November 12 2020]

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், தற்போது அவர் மாலத்தீவில் கணவருடன் தேனிலவு கொண்டாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

காஜல் அகர்வாலின் தேனிலவு புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை ஏராளமான ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தண்ணீருக்கு அடியில் இருக்கும் அறை ஒன்றில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தண்ணீருக்கு அடியில் இருக்கும் அறையில் இருப்பது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருப்பதாகவும், அறையை சுற்றிலும் கடல் நீர் மற்றும் விதவிதமான மீன்களுடன் இருக்கும் அனுபவமே வித்தியாசமானது என்றும் காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பதும், தேனிலவு முடிந்து அவர் நாடு திரும்பியதும் இந்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

View this post on Instagram

@kitchlug

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on Nov 11, 2020 at 9:01pm PST

More News

வேலை வெட்டி இல்லாதவர் ஸ்டாலின்… முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்!!!

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 10 ஆம் தேதி திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற காணொலி காட்சியில் கலந்து கொண்டு பேசினார்.

முகத்தில் உள்ள கருவளையம் போக வேண்டுமா… நல்லப் பாம்பை வைத்து தேய்க்கும் நூதன சிகிச்சை!!!

முகத்தில் உள்ள கருவளையத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக நம்ம ஊரு ஆண், பெண் என அனைவரும் பெயர் தெரியாத கிரீம்களை எல்லாம் அப்பிக் கொள்கிறோம்

தீபாவளி கொண்டாட்டத்தில் முன்னாள் போட்டியாளர்கள்: கலகலப்பாகும் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் செல்லும் பிக்பாஸ் சாக்சி அகர்வாலுக்கு ஆசி வழங்கிய பாரதிராஜா!

பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஆசி வழங்கிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்துள்ளார்.

பேஸ்ட் வடிவில் தங்கக் கடத்தல்… கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.