காஜல் அகர்வாலின் சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம்..! ஒன்றரை வயது குழந்தையின் க்யூட் புகைப்படங்கள்..

  • IndiaGlitz, [Sunday,January 28 2024]

நடிகை காஜல் அகர்வால் தற்போது தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பை தொழில் அதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது என்பது இந்த குழந்தைக்கு நீல் என்று பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது பதிவு செய்து வரும் காஜல் அகர்வால் தற்போது சுவிட்சர்லாந்தில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

ஒன்றை வயதாகும் இந்த குழந்தையின் க்யூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் கொள்ளை கொள்ளும் சுவிட்சர்லாந்து அழகில் குழந்தையின் அழகு ஜொலிக்கிறது என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.