முத்தம் கொடுக்கும் கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்தார் என்பதும், திருமணத்திற்கு பின்னர் அவர் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார் என்பதும் தெரிந்ததே. திருமண புகைப்படங்கள் மற்றும் தேனிலவு புகைப்படஞ்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேனிலவுக்கு பின் ‘ஆச்சார்யா’ உள்பட ஒரு சில படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட காஜல் அகர்வால், தற்போது ஊரடங்கு காரணமாக மீண்டும் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் கணவருடன் இணைந்த புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது கணவரின் அன்பு அணைப்பில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஒன்றில் காஜல் அகர்வாலுக்கு அவரது கணவர் கெளதம் கன்னத்தில் அன்பு முத்தம் கொடுக்கும் காட்சியும் உள்ளது. இந்த புகைப்படங்களை காஜல் பதிவு செய்து ஒரு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 4 லட்சம் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments