விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க காஜல் செய்த தந்திரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் படம் என்றாலே நடிப்பு, ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், என அனைத்தும் கலந்து ஒரு பொழுதுபோக்கு படத்திற்கு உத்தரவாதமாக இருக்கும். குறிப்பாக நடனப்பிரியர்களுக்கு விஜய் ஒவ்வொரு படத்திலும் விருந்தளிக்க தவறமாட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே
இந்த நிலையில் 'மெர்சல்' படத்திலும் விஜய்-காஜல் அகர்வால் இணைந்த பாடல் ஒன்றில் விஜய் அசத்தலான நடனம் ஆடியுள்ளாராம். ஏற்கனவே துப்பாக்கி, ஜில்லா ஆகிய படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடியிருந்தாலும் இந்த படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடிய அனுபவம் குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:
'நடனத்தில் அனுபவசாலியான விஜய்யுடன் நடனம் ஆடுவது நல்ல அனுபவம் என்றாலும் மிகவும் கஷ்டமான ஒன்று. சில கடினமான ஸ்டெப்ஸ்களை அவர் மிக எளிதாக ஆடிவிடுவார். அந்த மாதிரி நேரங்களில் நான் முன்கூட்டியே அந்த ஸ்டெப்ஸ்களை நடன இயக்குனரிடம் தெரிந்து வைத்து கொண்டு எனக்குள் ரிகர்சல் பார்த்து கொள்வேன். அப்படி இல்லாவிட்டால் பல ரீடேக்குகள் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments