'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? காஜல் அகர்வால் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் விலகுவதாகவும் ரிலையன்ஸ் அல்லது சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கலாம் என்றும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறப்பட்டது.

ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் மீண்டும் தொடங்கும் என்றும் லைகா நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கும் என்றும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் 'இந்தியன் 2 படத்தின் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால் இன்று அவர் நடித்த 'சீதா' படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டபோது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூனில் தொடங்கும் என்பதை உறுதி செய்தார். மேலும் இந்த படத்தில் நடிக்க தான் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.