close
Choose your channels

கர்ப்ப நேரத்தில் செய்ய வேண்டிய முக்கிய உடற்பயிற்சி: காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ!

Monday, February 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய உடற்பயிற்சி குறித்த வீடியோவை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மும்பை தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால் சமீபத்தில் கர்ப்பமானார் என்பதும், தற்போது இந்த தம்பதிகள் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது நீண்ட பதிவுகளை செய்து வரும் காஜல் அகர்வால், தற்போது கர்ப்ப நேரத்தில் செய்ய வேண்டிய ஏரோபிக் என்ற உடற்பயிற்சி குறித்த விவரத்தை வெளியிட்டு உள்ளார்.

நான் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகிறேன், என் வாழ்நாள் முழுவதும் நான் வேலை செய்து வருகிறேன். கர்ப்பம் என்பது ஒரு வித்தியாசமான உணர்வு, சிக்கலில்லாமல் கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும், தங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான முறையில் ஏரோபிக் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். கர்ப்பத்திற்கும் முன்பும் கர்ப்பத்திற்கும் பின்பும், இந்த உடற்பயிற்சி உதவியாக இருக்கும்.

இந்த பயிற்சி நமது உடலை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவி செய்யும் என்று கூறியுள்ளார். மேலும் தனது பயிற்சியாளர் உடன் அவர் ஏரோபிக் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment