'மாரி' படத்தில் காஜல் அகர்வால் வேடம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ், காஜல் அகர்வால் நடித்து முடித்துள்ள 'மாரி' திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டர் குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நான் ஃபேஷன் டிசைனராக நடித்துள்ளேன். தனுஷுக்கு எனக்கும் இந்த படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி அமைந்துள்ளதாக படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஒருவரை ஒருவர் மோதிக்கொள்ளும் கேரக்டர்களாக நாங்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் தனுஷ் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், அவருடைய அடக்கம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அவரிடம் இந்த படத்தில் நடித்தபோது பல விஷயங்களை கற்று கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ், காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 'வாயை மூடி பேசவும்' பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 17ஆம் தேதி சிம்புவின் 'வாலு'வுடன் மோதுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout